அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறாத குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இம்முறை இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் நடத்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்தியாவின் 15வது குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டன. ராதாகிருஷ்ணன், போட்டியிடுகிறார், மறுபுறம், இந்தியா கூட்டணி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியை குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களால் ஜூலை 21ஆம் தேதி இரவு திடீரென ராஜினாமா செய்தார்.