Kunichi residents boycott gram sabha over burial ground constructing for those who are coming to the village from other places. திருப்பத்தூர்: குனிச்சி ஊராட்சியில் வெளியூரை சேர்ந்த கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் சமூக மக்களுக்கென சுடுகாடு அமைப்பதை கண்டித்து அப்பகுதி உள்ளூர் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். மேலும் ரேஷன் அட்டைகளை ஒப்படைத்து நூதனப் போராட்டத்தையும் நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீரென வெளிநடப்பு செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.