IND vs NZ 5th T20: 5வது டி20 போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து இந்தியா அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் அதிரடியாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதாவது அக்ஷர் பட்டேல் மற்றும் மாயங்க் யாதவ் பதிலாக வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் களமிறக்கப்பட்டனர். அதேபோல் நியூசிலாந்தில் மேத்யூ ஃபிஷர் பதிலாக நேதன் ஸ்மித் களமிறங்கப்பட்டார்.