Magalir Urimai Thogai: மகளிர் உதவித்தொகையாக 2,500 ரூபாய் வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கூட்டுறவு பண்டக சாலை அங்காடி மூலம் 200 ரூபாய் விலையிலான சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனையை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: தமிழக முதல்வர் விஜய் வருகிற மூன்றாம் தேதி பெருந்துறையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய நலத்திட்டங்களைத் துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு உதவிகளை வழங்க உள்ளார்.