'முரசு' புயல் காரணமாக நவ.03-ஆம் தேதி வரை காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை: வங்கக்கடலில் முரசு புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகியுள்ள இரண்டாவது புயலுக்கு முரசு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.