Volkswagen Upcoming SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 8 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் விரைவில் அறிமுகமாக உள்ள, ஃபோக்ஸ்வாகனின் புதிய எஸ்யுவி குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். நடப்பாண்டின் தொடக்கத்திலேயே ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தனது இந்தியா 2.0 தயாரிப்பு உத்தியின் கீழ், புதிய மாடல்களையும் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்களையும் அறிமுகப்படுத்தும் என உறுதி செய்து இருந்தது. அதேநேரம் பலதரப்பட்ட பிரிவுகள் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கவனம் செலுத்தும் தனது திட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தது.