சென்னை,பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வீடுதோறும் மின்னணுக் கழிவுகள் சேகரிக்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் பழைய கைப்பேசிகள், கணினிகள், தொலைக்காட. இதில் பழைய கைப்பேசிகள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட மொத்தம் 1,309 மின்னணு மற்றும் மின்சாதனக் கழிவுகள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன..மின்னணுக் கழிவுகள்இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-இந்திய அரசால், மின்னணுக் கழிவுகளைத் திறம்படச் சேகரித்தல், தரம் பிரித்தல் மற்றும் முறையாக அகற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கும், இது தொடர்பான நடவடிக்கைகளை உரிய முறையில் ஒருங்கிணைப்பதற்கும், சிறப்பு இயக்கம் 6.0 என்ற முன்னெடுப்பினை அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.