Kanimozhi: இப்போதைய முழு நேர வேலை என்ன? நம் பின்னாடி சுற்றுவதுதான். இப்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பது திமுககாரர்கள்தான் என கனிமொழி கூறியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்து, திமுக மகளிர் அணியின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியதிமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. பெண்கள் நினைத்தால் செய்ய முடியாதது என்று ஒன்றுமே இல்லை. தவறாகிவிட்டது அதனால் நீங்கள் இல்லை, உங்களைச் சொல்லவில்லை.