Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2500 வழங்குவதற்கு முன்னதாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பின்பற்றும் மற்ற மாநிலங்கள் இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பல்வேறு மாநிலங்களும் தமிழக அரசை பின்பற்றியது.