ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை கீழே விரிவாக காணலாம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்து பல பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் போராடி வரும் நிலையில், அவரைத் தடுக்க சந்திரகலா போடும் சதிகள் கதையை இன்னும் விறுவிறுப்பாக்கியுள்ளன. அருணின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவருடைய இதயத்தைச் சாமுண்டீஸ்வரிக்குப் பொருத்தி அவரது உயிரைக் காப்பாற்ற கார்த்திக் கிளம்புகிறார்.