இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் முன்னாள் துணைப்பிரதமர் வல்லபாய் படேலின் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் ஏன் இரும்பு மனிதர் என அழைக்கப்படுகிறார்?, அவர் ஏன் இந்தியாவின் பிரதமராகவில்லை என்பதை விரிவாக பார்க்கலாம். குஜராத் மாநிலத்தில் உள்ள நடியாத் பகுதியில் 1875-ஆம் ஆண்டு வல்லபாய் படேல் பிறந்தார். 1891-ஆம் ஆண்டு பள்ளிக்கல்வியை கரமசாத்தில் ஆரம்பப் பள்ளியிலும், பெட்லாடில் உயர்நிலைப் பள்ளியிலும் நிறைவு செய்த படேல் தனது 16-வது வயதில் ஜாவேர்பா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இங்கிலாந்தின் மிடில் டெம்பிளுக்கு சென்று சட்டப்படிப்பை நிறைவுசெய்த படேல், இந்தியாவிற்கு திரும்பி தனது வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார்.