தவெக ஆட்சியில் ரிவர்ஸ் ஆக்ஷன் என்ற யுக்தி மூலமாக தமிழ்நாடு வாணிப கழகத்தில் ரூபாய் 100 கோடி வரை அரசுப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. தவெக ஆட்சிப்பொறுப்பேற்றதும் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருப்பது கடன் சுமை. தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், கடன் சுமையும் மிகப்பெரிய அளவில் உள்ளது. இதனால், கடன் சுமையை குறைத்து அரசின் பணத்தை சேமிக்கும் பணியில் தீவிரமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.