திருப்பரங்குன்றம்மதுரைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர்.திருப்பூ. நண்பர்களான இவர்கள் 4 பேரும் மதுரை பாண்டிகோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் உடுமலைப்பேட்டையில் இருந்து மதுரை நோக்கி வந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, திடீரென்று காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அதிக அளவில் புகை வெளியேறியதால் உடனடியாக சுதாரித்த கிருஷ்ணன், தோப்பூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு அனைவரையும் கீழே இறங்க செய்தார்.