செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.200க்கு 10 வகையான சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.வீரப்பன் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.200 விலையில் 10 வகையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.வீரப்பன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பா.விஜயராஜ் அவர்கள் முன்னிலையில், திருப்போரூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் பண்டகசாலை கடையில் 30.10.2026 அன்று தொடங்கி வைத்தார்.