இருப்பிட மற்றும் வழிகாட்டும் சேவைக்கு உதவும் நேவிக் அமைப்பை வலுப்படுத்தி குறைபாடுகளை களைய உதவும் என்விஎஸ் - 03 செயற்கைக்கோள். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட் இரவு 11.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேரக்கவுன்டவுன் 29-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று இரவு 11.51 மணிக்கு வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதனைத்தொடர்ந்து புவி வட்டப்பாதையில் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.