விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 5 பயணிகள் மற்றும் ஒரு விமானி உட்பட மொத்தமாக 6 பேர் பயணித்துள்ளனர். டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே சென்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. 6 பேரும் உயிரிழப்பு ஹெலிகாப்டர் மாயமான சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹெலிகாப்டரில் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழுக்கள் நடத்திய தீவிர மீட்புப் பணியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டறியப்பட்ட நிலையில், பயணித்த ஆறு பேரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.