இந்தியாவில் ரூ.76,400 விலைக்கு அறிமுகமான டெஸ்டினி 110 கிளாசிக் எடிஷன் விலை, மைலேஜ், சிறப்பம்சங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், டெஸ்டினி 110 கிளாசிக் எடிஷனை இந்தியாவில் ரூ.76,400 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பண்டிகைக் கால சிறப்பு எடிஷனான இது, நியோ-ரெட்ரோ ஸ்டைலிங், புதிய டூயல்-டோன் கலர்கள் மற்றும் தனித்துவமான அப்டேட்களைப் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரின் எஞ்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதாவது, இது அதே 110.9cc இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 7,250rpm-ல் 8.2hp சக்தியையும், 5,750rpm-ல் 8.7Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.