மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட 73 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆணைக்கோவில் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் இருபத்தி ஆறாம் தேதியன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கொடூர கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் ரமேஷ் (45) என்பவரை, அதே பகுதியில் வசித்து வரும் ராசையன் என்பவரின் மகன் ராஜமூர்த்தி (22) என்பவர் திடீரென முன்விரோதம் காரணமாக கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.