திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் இருப்பது அரசியல் ரீதியான போட்டி மட்டுமே என்றும், தனிப்பட்ட முறையில் எந்தவிதமான மோதலும் இல்லை - சீமான். இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகவும் பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.