TET Exam: சிறப்பு டெட் தேர்வில் தோல்வியடைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டிசம்பர் 20ம் தேர்வு நடைபெறும் நிலையில் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பள்ளிகளிலும் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஜூலை 4, 5-ம் தேதிகளில் தாள்-1, தாள்-2 தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் அக்டோபர் 12ம் தேதி வெளியானது. இரண்டு தேர்வுகளையும் சேர்த்து 2,17,519 ஆசிரியர்கள் எழுதிய நிலையில் 1,08,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது 50.66 சதவீதம் பேர் தோல்வி அடைந்தனர்.