இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 4வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஆக்லாந்தில் நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதி வரும் டி20 தொடர் தற்போது நடந்து வருகிறது. 4வது டி20: இரு அணிகளும் மோதிய முதல் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டி அந்த நாட்டில் உள்ள ஆக்லாந்து மைதானத்தில் நடக்கிறது.