இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியான நிலையில் தனிப்பட்ட கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லை. எந்தக்கட்சிக்கு எத்தனை இடங்கள்? இஸ்ரேலில் மொத்தமுள்ள 121 இடங்களில் நெதன்யாகுவின் லிகுத் கட்சி தனித்து 27 இடங்களையும் அதான் கூட்டணி மொத்தமாக 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எதிரணிக்கு தலைமை தாங்கும் காடி ஐசன்கோட் கட்சி தனித்து 21 இடங்களையும், அதன் கூட்டணி மொத்தமாக 48 இடங்களிலும் வென்றுள்ள நிலையில் அரபுக்கட்சிகள் 19 இடங்களை கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை எந்தக்கூட்டணியும் பெறாததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. ஆட்சியமைக்க போவது யார்? தொடரும் சர்ப்ரைஸ்!