ஹாங்காங் சிக்ஸர்ஸ் தொடரில் இந்தியா நிர்ணயித்த 89 ரன்கள் இலக்கை 3.5 ஓவர்களில் பாகிஸ்தான் எட்டி வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வரும் அதேசமயம், ஹாங்காங்கில் ஹாங்காக் சிக்ஸஸ் என்ற கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்று ஆடி வருகிறது. 6 ஓவர் போட்டி: 6 ஓவர் கொண்ட இந்த போட்டியைப் பொறுத்தமட்டில் 6 வீரர்கள் மட்டுமே பங்கேற்று ஆடுவார்கள். இதில் இன்று நடந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியது.