அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானை பொதுவேட்பாளராக களமிறக்குவதில் திமுக, அதிமுக-விற்கு உள்ள சிக்கல்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம். Ambasamudram ByPoll 2026: தமிழ்நாட்டில் இன்னும் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று கருதப்படுகிறது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக-வை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்க்கமாக உள்ளது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சீமானுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக முடிவு செய்யும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.