சென்னை மாநகராட்சியில் மழையால் சேதமடைந்துள்ள 678 பேருந்து செல்லும் சாலைகள் சீரமைப்பதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா். அதன் அடிப்படையில், மாநகராட்சிப் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.154.16 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழு பரிந்துரைப்படி முதல் கட்டமாக ரூ.130.19 கோடியில் சாலைப் பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும், ரூ.2.21 கோடியில் 3.06 கி.மீ. தொலைவு 25 இன்டா் லாக் பேவ்மென்ட் பிளாக் சாலைகளும் என மொத்தம் 148.10 கி.மீ. தொலைவுக்கான சாலைகள் 15 மண்டலங்களிலும் 678 சாலைகள் மேம்பாட்டுக்காக தனியாா் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.