"தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. மக்கள் பிரச்சினைகளில் தமிழ்நாடு அரசு உடனே கவனம் செலுத்த வேண்டும்" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நல்லூரில் அமைந்துள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விலைவாசி உயர்வு குறித்து தங்களிடம் கேள்வி கேட்பதை விடுத்து மாற்றம் வேண்டும் என வாக்களித்த மக்கள் தான் அதிகம் பேச வேண்டும் என்றார்.