சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிதாக 8 நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க அனுமதியளிப்பதெனவும், சாதிவாரி எனும் சமூகநீதி கணக்கெடுப்பை மேற்கொள்ள முதற்கட்டமாக சமூகநீதி ஆணையத்தை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். "திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்" பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நிகழ்ந்ததாக நடைபெற்றுவரும் வழக்கில் தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதாகவும், இன்னும் பல கல்வி நிறுவனங்கள் திமுகவினருக்கு பயந்து புகாரளிக்காமல் இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் சாடினார்.