திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் திருச்சி வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நிறைவுபெற்றது. பிரச்சனைகளை திசை திருப்பவே தன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாவும், தான் இல்லாவிட்டாலும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தொண்டர்கள் வேலை செய்வார்கள் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். நிறைவு பெற்ற சோதனை திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றது. சுமார் 7 மணி நேரத்துக்கு மேல் இந்த சோதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, சோதனை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.என்.