பாரா ஆசியப்போட்டித்தொடரில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கிய முதலமைச்சர் விஜய். முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய், பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்துக்கொண்டனர். முதலமைச்சர் கோப்பை போட்டித்தொடர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நடத்திவருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் அக்.15 ஆம் தேதியன்று தொடங்கி நடைபெற்ற நிலையில் கடந்த 28-ஆம் தேதி நிறைவடைந்தது.