சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியதற்கு தார்மீக பொறுப்பேற்று சிறைத்துறை அமைச்சர் பதவி விலகுவாரா? - சீமான் கேள்வி. 5 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளதாகவும், அம்பாசமுத்திரம் தொகுதியில் தாமே போட்டியிட உள்ளதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி கட்டாயம் போட்டியிடும் எனவும், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தானே வேட்பாளராகப் போட்டியிட உள்ளதாகவும் அனைத்து சாதியினருக்கும், அனைத்து மதத்தினருக்கும் தான் எப்போதும் பொதுவேட்பாளர்தான் எனவும் குறிப்பிட்டார்.