தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50-ஆகவும், கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25-ஆகவும் நிா்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக, தமிழக அரசின் உள்துறை (போக்குவரத்து-1) சாா்பில் அரசாணை எண் 366, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.புதிய கட்டண விவரங்கள்: அதன்படி, புதிய கட்டண விகிதங்களின்படி, முதல் 1.8 கி.மீ. அதற்குப் பிறகு பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும். மலைப் பாதைகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணத்தைவிட 1.2 மடங்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மலைப் பாதைக்கான அடிப்படைக் கட்டணம் ரூ.60-ஆகவும், கூடுதலாகப் பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.-க்கும் ரூ.30-ஆகவும் இருக்கும்.