சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் எஸ்.பி. கார்த்திகா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். 2 Min Read சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் எஸ்.பி. வளர்மதி, வெளிநாடுவாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, வெளிநாடுவாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநர் ஆர். சதீஷ், சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.