சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தைத் தொடர்ந்து, சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்திலும் கடந்த 23-ம் தேதி முதல் ஏசி மின்சார ரயில் சேவை சோத. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 5 நாட்கள் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள கட்டணப் பட்டியலின்படி, 51 கி.மீ. முதல் 70 கி.மீ வரையிலான தொலைவுக்கு ரூ.100 முதல் ரூ.230 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவாலங்காட்டில் இருந்து 59 கி.மீ தொலைவில் உள்ள சென்னை சென்ட்ரலுக்கு முறைப்படி, ரூ.105 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், பயணிகளிடம் ரூ.215 வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது..