ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.200 உயர்ந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்தை கடந்துள்ளது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் ஏதுமில்லை. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. எனினும், பெரிய அளவில் ஏற்றம் அடையாதது நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது. சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.75 உயர்ந்து ரூ.13,230 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.82 உயர்ந்து ரூ.14,433 ஆகவும், சவரன் விலை ரூ.