ரூபாய் 100 கோடி லஞ்ச புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ரூபாய் 100 கோடிக்கும் மேல் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் என்பதால் சிறையில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள், வசதிகள் என்னென்ன? மெத்தை, மின்விசிறி: சென்னையின் பிரபலமான புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு பிரிவில் அன்பில் மகேஷ் அடைக்கப்பட்டுள்ளார்.