Minster Keerthana: கமிஷன் வாங்கியதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், சட்டப்பூர்வமான அனைத்து வழிகளையும் பயன்படுத்துவேன் என அமைச்சர் கீர்த்தனா எச்சரித்துள்ளார். அமைச்சர் கீர்த்தான உடன் இருக்கும் குடும்பத்தினர் அரசு ஒப்பந்தங்களுக்கு, ஒப்பந்ததாரர்களிடமிருந்து கமிஷன் பெற்று வருவதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகி சர்ச்சையானது. இதுதொடர்பாக அமைச்சர் கீர்த்தனா 4 பக்கத்திற்கு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு பொய் மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது, மக்கள் அதை உண்மை என்று தவறாகக் கருதத் தொடங்கக்கூடும். ஆனால், ஒரு பொய் பலமுறை சொல்லப்பட்டாலும் அது உண்மையாகிவிடாது. ஆதாரங்களுக்குப் பதிலாகத் தவறான தகவல்கள் இடம்பெற அனுமதிக்கக் கூடாது.