Diwali Deal Car Discount: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.12 லட்சம் மதிப்பிலான காம்பேக்ட் எஸ்யுவிக்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. கார்களுக்கான தீபாவளி சலுகை: பண்டிகை கால சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள கார் உற்பத்தி நிறுவனங்கள், பல அதிரடியான மற்றும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகின்றன. இதில் பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்ரேட் பலன்கள் மற்றும் விலையில்லா அக்செசரி பேக்கேஜ்கள் ஆகியவையும் அடங்கும். ஒருவேளை நீங்கள் இந்த பண்டிகை காலத்தில் ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் சப்-4 மீட்டர் எஸ்யுவி காரை வாங்க திட்டமிட்டு இருந்தால், அவற்றின் மீது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை திட்டங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.