உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் போட்டியிட வாய்ப்பு பெற முயற்சிப்பதால் தவெக-வில் தொடக்க காலம் முதலே இருந்து வந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தவெக வெற்றி பெறும் என்று பலரும் கணிக்கத் தவறியதால் தவெக-வை விமர்சித்து வந்தனர். தவெக ஆட்சியில் அமைந்த பிறகு மாற்றுக்கட்சியினர் பலரும் தவெக-வில் திரண்டு இணைந்து வருகின்றனர். மாற்றுக்கட்சியினருக்கு முக்கியத்துவம்: குறிப்பாக, அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், கடம்பூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன் என பலரும் குவிந்தனர். மேல்மட்டமின்றி கீழ்மட்டத்திலும் மாற்றுக்கட்சியினர் பலரும் தவெக-வில் இணைந்துள்ளனர்.