தமிழ்நாட்டிற்கு இதற்கு முன்பு சிறையில் இருந்து கைதிகள் தப்பிய வரலாறு குறித்து கீழே காணலாம். தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடிய கைதிகள் அனைவரும் 48 மணி நேரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டின் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவம் இதற்கு முன்பும் அரங்கேறியுள்ளது. அதில் மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி கீழே காணலாம். 43 கைதிகள் தப்பிய அதிர்ச்சி: 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.