ரூபாய் 634 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே கடந்த கால திமுக அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனைகள் நடந்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூபாய் 100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காலை முதல் சோதனை: இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.