அஜித்குமாரின் கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்ட ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ (Gladiators) ஆவணப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதிபடுத்தியுள்ளார். பொங்கலுக்கு வெளியாகும் கிளாடியேட்டர்ஸ் அஜித்தின் கார் பந்தய அனுபவங்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவர் பங்கேற்ற தருணங்களை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாகியுள்ளது. விஜய் இயக்கியுள்ள இப்படத்தை, ஷாலினி அஜித்குமார் கோல்டன் டிராபி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.