திமுக ஆட்சியின் லட்சணத்தை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பி பார்க்க வேண்டும் என்று தவெக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பற்றி திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. மீண்டும் பிடிபட்ட 17 கைதிகள்: இந்த நிலையில், தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளையும் போலீசார் கைது செய்தனர்.