இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 68.71 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகின்றன.மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும்.எத்தனை சதவீதம் அகவிலைப்படி உயர்வு கொடுத்துள்ளோம் என்பதை மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் மத்திய அரசு அறிவிக்கும்.இதனிடையே, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாமல் இருந்தது.