’மத்திய அமைச்சரவையில் இணைந்தால் தவெக அரசே, தங்களை நோக்கிதான் வரவேண்டும் என்றும், 2029லேயே சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட்டால் அது திமுகவிற்குதான் சாதகமாக இருக்கும் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது’. தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்துள்ள திமுகவிற்கு, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, திமுகவின் முக்கியமான தளகர்த்தகர்களான கே.என்.நேரு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்தும், அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தியும் நெருக்கடி கொடுத்தது. இதனையடுத்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேசையே, ஊழல் வழக்கில் கைது செய்து சிறையிலும் அடைத்திருக்கிறது.