OMR ECR Link Road: பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (OMR) கிழக்கு கடற்கரை சாலை(ECR) வரையிலான புதிய இணைப்பு பாதைக்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் தொடங்கி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் வரையில், இணைப்பு சாலையை அமைக்க விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சோழிங்கநல்லூர் சந்திப்பு பகுதிக்கு தீர்வு கிடைப்பதோடு, இரண்டு சாலைகளுக்கு இடையேயான இணைப்பு மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.