Rowdy CD Mani: 10 கொலை வழக்குகள் உள்பட 36 குற்ற வழக்குகளும், ஐந்து முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி சி.டி.மணி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டை தாமஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன். 1990ம் ஆண்டு காலகட்டத்தில் தி.நகர், சைதாப்பேட்டை பகுதிகளிலுள்ள பிளாட்பாரங்களில் புதுப்பட சி.டி-க்களை விற்பனை செய்து வந்தார். ஆரம்பத்தில் திருட்டு சி.டி விற்பனை தொடர்பான தகராறு, செயின் பறிப்பு போன்ற சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் திண்டுக்கல் பாண்டியின் அறிமுகம் கிடைத்த பிறகு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.