வணிக வளாகங்கள், தேநீர் கடைகள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 3 Min Read மதுரை: டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் நாள்தோறும் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.