சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று காலை காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட 4 அரசுப் பள்ளி மாணவர்களையும், போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு 2 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பத்திரமாக மீட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று காலை வீட்டிலிருந்து காணாமல் போன நான்கு பள்ளி மாணவர்களும் இரண்டு மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து குழந்தைகள் காணாமல் போவது சர்ச்சையான சூழலில் அரசு பள்ளியை சேர்ந்த 4 மாணவர்கள் ஒரே நேரத்தில் மயமானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.இந்த 4 மாணவர்களும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். மாணவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.