சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்களை நியமித்து சிஎஸ்கே நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் தனக்கென தனி வரலாறு கொண்ட அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ். சிஎஸ்கே அணியைப் பொறுத்தமட்டில் கடந்த 3 வருடங்களாக அவர்களது செயல்பாடு அந்த அணியின் ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. வலுவாகும் சிஎஸ்கே: ருதுராஜ் கேப்டன்சியில் அணி மிகப்பெரிய அளவில் அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 3 சீசன்களாக சிஎஸ்கே செயல்பாடு மோசமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளராக அடுத்த சீசன் முதல் ஸ்டீபன் ஃப்ளமிங்கிற்கு பதிலாக ஜாகிர்கான் செயல்பட உள்ளார்.