IND vs NZ 3rd T20: நியூசிலாந்து அணிக்கு எதிராக 198 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் இரு டி20 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 199 ரன்கள் டார்கெட்: இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய 3வது டி20 கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 199 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது.